ருசியான மலபார் நெய்சோறு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

Summary: மணக்க மணக்க மலபார் நெய்சோறு சட்டுன்னு இப்படிசெஞ்சு பாருங்க சில நிமிஷத்தில் ருசியான லஞ்ச் ரெடி! குழந்தைகளுக்கு சாதத்தில் நெய்விட்டு பிசைந்து கொடுத்தால் எவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள்! அப்படி இருக்க, இதுபோல ருசியான மலபார் நெய்சோறு செஞ்சு கொடுத்து பாருங்க, குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும்அதற்கு அடிமையாகி விடுவார்கள். செய்வதற்கும் ரொம்பவே எளிமையாக இருக்க கூடிய இந்த நெய்ச்சோறுசில  நிமிஷத்தில் எப்படி செய்றாங்க? இதை நாமும்இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 3 மேசைக்கரண்டி நெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • அன்னாசி
  • புதினா
  • உப்பு
  • 10 முந்திரி
  • 10 பாதாம் பருப்பு
  • 10 திராட்சை

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம்மற்றும் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
  2. அவை பொரிந்து வரும் போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் உப்பு மற்றும் களைந்து ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
  4. கொதி நன்கு வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
  5. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்தால் சாதம் நன்கு பொலபொலவென்று வெந்து இருக்கும்.
  6. சுவையான,மணமான மலபார் நெய்சோறு ரெடி
  7. இதனை தயிர் பச்சடி, மலபார் காரக்குழம்பு, கிராவிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது. மிகவும் சத்தானது. எளிதாக ரிச்சாகவும் இருக்கும்.