மாலை நேரம் Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சிக்கன் பஜ்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி என்று இதுபோன்ற ஒரே ரெசிபியினை செய்து சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான பஜ்ஜி வகை ஒன்றினை பற்றி பார்க்கபோகிறோம். சிக்கன் பஜ்ஜி என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். சூடான காஃபி அல்லது டீயுடன் இந்த சிக்கன் பஜ்ஜிகளை செய்து ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டு மகிழலாம்.

Ingredients:

  • 1/2 கி போன்லெஸ் சிக்கன்
  • 1 கப் கடலை மாவு
  • 1 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 வாணலி

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பிறகு இதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு, சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
  3. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ் என அனைத்தையும் ஒரு‌ பாத்திரத்தில் தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அதன்பிறகு எடுத்து வைத்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதனை காய விடவும்.
  6. பின் நாம் கரைத்த மாவில் சிக்கனை முக்கி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான சிக்கன் பஜ்ஜி தயார்.