மதிய உணவுக்கு பக்காவான சுரைக்காய் பொரிச்ச கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சுரைக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து இவ்வளவு அருமையான சுரைக்காய் பொரிச்ச கூட்டு செய்து விட முடியும்.காய்கறிகளை பொரியலாக செய்து கொடுத்தால் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இப்படி பருப்புசேர்த்து பொரிச்ச கூட்டு செய்யும் பொழுது அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள்.  எனவே குழந்தைகளுக்கு இதன் சுவை பிடித்தமானதாக இருக்கும்.வாருங்கள் இந்த சுரைக்காய் பொரிச்ச கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

Ingredients:

  • 1/4 கிலோ சுரைக்காய்
  • 50 கிராம் கடலைப்பருப்பு
  • 6 வரமிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு
  • உப்பு
  • 2 தேங்காய் சில்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சுரைக்காய் பொரிச்ச கூட்டு செய்ய தேவையான அனைத்தையும் தயாராக வைத்து கொள்ளுங்கள். தேங்காய் அரைக்க தயாராக வைக்கவும்.
  2. முதலில் ஒரு கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைவறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  3. கடலைப்பருப்பை கழுவி 2 கிளாஸ் தண்ணீரில் வேகவிடவும்.
  4. பருப்பு 3/4 பதம் வெந்தவுடன் சுரைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி பருப்பில் போட்டு,உப்பு, அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கூட்டில் கொட்டவும்
  6. சுவையான சுரைக்காய் பொரிச்ச கூட்டு தயார்.