காரஞாரமான கோபி மஞ்சூரியன் மிக ஈஸியாக வீட்டில் செய்து அசத்தலாம் அதன் ரெசிபி இதோ!

Summary: மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறையவெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது கோபி அதாவது காலிஃப்ளவர் மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே கோபி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.

Ingredients:

  • 1 காலிஃப்ளவர்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 4 ஸ்பூன் சோளமாவு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் சோயாசாஸ்
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு மொட்டுகளாக உடைத்து வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்
  3. பிறகு கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையில் 3 1/2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து அதில் சிறிதளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் மொட்டுக்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  5. அனைத்து காலிபிளவர் பூக்களையும் எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  8. பிறகு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சோளமாக சேர்த்து அதில் நீர் விட்டு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். வாணலியில் கலந்து வைத்துள்ள சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.
  9. சோளமாவு சேர்த்ததால்  திக்காகிவரும் அப்படி திக்கான பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவர் பக்கோடா போட்டு நன்றாக கலந்து விட்ட வேண்டும்.
  10. காலிஃப்ளவர் நன்றாக கலந்த பிறகு ஒரு ப்ளேட்டில் எடுத்து அதன் மேல் வெள்ளை எள் தூவி பரிமாறினால் சைனீஸ் ஸ்டைல் காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்.