மணமணக்கும் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி ?

Summary: தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். இந்த சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம். அந்த சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல், மற்றும் சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த தேங்காய் சாதம் இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து நிகழும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 250 கிராம் பாசுமதி அரிசி
  • 1 பச்சை மிளகாய்
  • 4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 முற்றிய தேங்காய்
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • 10 வறுத்த முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாசுமதி அரிசியை ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவிற்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.
  2. அடுத்து தேங்காயை துருவிக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், சேர்த்து தாளித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்தெடுக்கவும்.
  4. பிறகு வருத்தத்தை சாதத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக கிளறி விடவும். கடைசியாக கறிவேப்பிலை மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி விடவும்.
  5. இப்பொழுது ருசியான தேங்காய் சாதம் தயார்.