இந்த வார இறுதியில் சூப்பாரமான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்ல நாட்டுக்கோழி குழம்பு தான். பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே. கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். இந்த நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு. இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1/2 கி நாட்டுக் கோழி
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 1/4 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 5 வர மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நாட்டு கோழியை சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரை விட்டு வேக வைக்கவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சோம்பு, சீரகம், வரமிளகாய், மல்லி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு மிக்ஸியில் நாம் வதக்கிய இரண்டையும் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  6. அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஒரு கடாயில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. பிறகு வேகவைத்த நாட்டு கோழியை இதில் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இறுதியில் கொத்தமல்லியை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு தயார்.