காலை டிபனுக்கு கொஞ்சம் வித்தியாசமா ருசியான பீட்ரூட் ஆப்பம் செஞ்சி பாருங்கள்!

Summary: அப்பம் அல்லது "ஆப்பம்" என்று அழைக்கப்படும் இப்பண்டம் இந்தியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் கலந்து செய்யப்படுகின்றது. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் பீட்ரூட் சேர்த்து சத்தான பீட்ரூட் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பீட்ரூட் சேர்த்து செய்வதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 கப் வடித்த சாதம்
  • 1/2 டீஸ்பூன் சோடா உப்பு
  • தேவையான அளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 பீட்ரூட்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 ஆப்ப கடாய்

Steps:

  1. முதலில் அரிசி, உளுந்தை நன்கு அலசி விட்டு அதனுடன் வெந்தயம் சேர்த்து குறைந்தது 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஊற‌ வைத்த அரிசி, உளுந்தை ஒரு மிக்ஸியில் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
  3. அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். 8 மணி நேரம் வரை மாவு நன்கு புளித்து பொங்கி வரும் வரை அப்படியே வைத்து விடவும்.
  5. பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதன்‌ சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  6. நாம் அரைத்து வைத்துள்ள மாவில் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  7. ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி மூடி போட்டு வேக விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான மற்றும் சாஃப்ட்டான பீட்ரூட் ஆப்பம் தயார்.