நாவூறும் சுவையில் அருமையான மீன் கோலா உருண்டை ரெசிபி எளிதாக எப்படி வீட்டில் தயாரிப்பதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

Summary: கோலா உருண்டை என்றாலே நமக்கு மட்டன் தான் ஞாபகம்வரும். ஆனால் மீனில் அதைவிட அருமையான சுவையில் அற்புதமான கோலா உருண்டை தயாரிக்கலாம்.தொடர்ந்துமீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது,குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் நிறைய நன்மைகளை உடலுக்குசெய்யக்கூடியது. இதை குழம்பு, வறுவல் வைத்து சாப்பிட விரும்பாதவர்கள் கூட , இது போலருசியான கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பாருங்க, ஒரு உருண்டை கூட மிஞ்சாது. இன்னும்வேண்டும் என்று கேட்கத் தூண்டும். அந்த அளவிற்கு ருசியான இந்த ஆரோக்கியமான மீன் கோலாஉருண்டை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து காணலாம் வாங்க.

Ingredients:

  • 1/2 கப் மீன் துண்டுகள்
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 5 பச்சை மிளகாய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் கசகசா
  • 1/4 ஸ்பூன் சோம்பு
  • கறிவேப்பிலை
  • 2 டீ ஸ்பூன் நல்லேண்ணெய்
  • 2 கப் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முள் அதிகம் இல்லாத மீனாக வாங்கி தோல், முள் நீக்கி, சுத்தம் செய்து வைக்கவும். தேங்காயை  துருவி வைக்கவும்.
  2. தேங்காய்,மீன் துண்டுகள், சோம்பு, கசகசா, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,பொட்டுக்கடலைஎல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் நல்லேஎண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  4. பொறிக்க தேவையான எண்ணையை அடுப்பில் வைத்து காய்ந்ததும். குறைந்த தீயில் வைக்கவும்.
  5. உருண்டைகளை எண்ணையில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .இதே முறையை பயன்படுத்தி கறி,கோழி, இறால் கோலா உருண்டைகளுக்கு பின்பற்றவும்.