சுவையான கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி ?

Summary: இன்று கடலைப்பருப்பு சுண்டல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டலை பயன்படுத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவிலேயே சுண்டலை ஊற வைக்க வேண்டும் பின் அதை அவிக்க வேண்டும். எப்படி பல வேலை பாடுகள் இருக்கிறது. ஆனால் இந்த கடலை பருப்பு சுண்டலை உடனடியாக வைத்துவிடலாம் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 200 கிராம் சுண்டல்
  • 1 டம்பளர் தண்ணீர்
  • ½ tbsp உப்பு
  • 2 சிட்டிகை பெருங்காய தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1  tbsp இஞ்சி
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2  பச்சை மிளகாய்
  • 4 வர மிளகாய்
  • வேக வைத்த கடலை பருப்பு
  • 2 மேசை கரண்டி துருவிய தேங்காய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் 200 கிராம் கடலை பருப்பை ஒரு பெரிய பவுலில் சேர்த்து அதனுடன் தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை நன்கு அலசி எடுத்து கொண்டு. பின் பவுளில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடலைப்பருப்பு ஒரு மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு கடலைப்பருப்பை குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், இரண்டு பச்சை மிளகாய், 4 வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  4. பின் இதனுடன் நாம் வேகவைத்த கடலை பருப்பை தண்ணீர் இல்லாமல் சேர்த்து இரண்டு மேசை கரண்டி அளவு துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கடலை பருப்பு சுண்டல் தயாராகிவிட்டது.