வயிற்றுக்கு இதமாக ருசியான ஒமம் ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Summary: விதவிதமான ரச வகைகளில் ஓமம் ரசம் ரொம்பவே ஆரோக்கியம்மிக்கதாக இருந்து வருகிறது. செரிமான பிரச்சனை, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடியசக்தி இந்த ஒரு ஓமம் ரசத்திற்கு உண்டு. ஜீரணத்திற்குமட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் ஓமம் அருமருந்து. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிகஉதவியாக இருக்கிறது. இந்த ரசம் வெயிலின் தாக்கத்தினால்ஏற்படும் உடல் உபாதைகளை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது. வாங்கஇப்போ இந்த ஓமம் ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 2 தக்காளி
  • புளி
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 1 சிறிய துண்டு வெல்லம்
  • 1 சிட்டிகை மஞ்சள் பொடி
  • கொத்தமல்லி இலை
  • 1/2 தேக்கரண்டி நெய்
  • 1 தேக்கரண்டி துவரம் பருப்பு
  • 1 மிளகாய் வற்றல்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி ஓமம்
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • 2 ஆர்க்கு கருவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி நெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 மிளகாய் வற்றல்
  • 1 ஆர்க்கு கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். வறுக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு சீரகம் ஓமம் சேர்க்கவும்.
  2. தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து , சூடன்னதும் வறுக்க கொடுத்தவற்றைவறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
  4. வறுக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு சீரகம் ஓமம் சேர்க்கவும். வாணலி சூட்டில் சீரகம் ஓமமும்வறுபட்டுவிடும். சீரகம் ஓமம் வறுத்தால், ரசம் கசப்பு சுவையுடன் வந்துவிடும்.
  5. ஊறவைத்த புளியைகரைத்து வடிகட்டவும். கடாயில் புளி கரைச்சல் சேர்த்து விட்டு தக்காளி உப்பு மஞ்சள்பொடி வெல்லம் சேர்த்து ஒரு கொதி விடவும்.
  6. திரித்த பொடியை சேர்த்து நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொத்தமல்லி இலை தூவி சேர்த்து பரிமாறவும்.