அடிக்கடி சாம்பார் வைத்தாலும் பாலக் கீரை சேர்த்து இப்படி சாம்பார் செய்து பாருங்க சலிக்காம சாப்பிடுவாங்க!

Summary: அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது சாம்பார் தான். என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். தமிழ்நாட்டில் பல வகையான சாம்பார் உண்டு. அதில் நாம் பாலக் கீரையை வைத்து சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம். பாலக் கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இந்த கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 கட்டு பாலக் கீரை
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • புளி
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாலக் கீரையை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை தண்ணீர் ஊற வைத்து அதன் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கப் துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  4. அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அதனுடன் மஞ்சள் தூள், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  6. குழம்பு கொதித்ததும் நாம் எடுத்து வைத்த புளி தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். இது நன்கு கொதித்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து கலந்து விடவும்.
  7. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான பாலக் கீரை சாம்பார் தயார். இந்த பாலக் கீரை சாம்பார் சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.