இரவு டிபனுக்கு சுட சுட மிருதுடான சிறுக்கீரை சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Summary: தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ சற்று வித்தியாசமாக மற்றும் சுவையான கீரை சப்பாத்தி செய்து பாருங்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் ஒரு இரவு உணவாக சப்பாத்தி உள்ளது. சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் சப்பாத்தி எடையைக் குறைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. இன்றைய பதிவில் எடை இழப்புக்கு உதவக்கூடிய கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சப்பாத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கட்டு சிறுகீரை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் ஓமம்
  • 300 கி கோதுமை மாவு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் சிறுகீரையை அலசி வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் சுத்தம் செய்த சிறுகீரையை சேர்த்து அதனுடன் சீரகம், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. கோதுமை மாவை ஒரு பவுளில் சேர்ந்து அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் ஓமம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. பிசைந்த மாவை 10 நிமிடங்கள்‌ அப்படியே வைத்து விடவும். சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  6. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான சிறுகீரை சப்பாத்தி தயார்.