காரசாரமான கேரளா ஸ்டைல் இறால் மிளகு வறுவல் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!

Summary: இறால்கள்மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இறால் மட்டும் என்று கூற இயலாது கடல் சார்ந்த உணவுகளின் மீது விருப்பமுள்ள அசைவ பிரியர்கள் பலர் இங்கு உண்டு. அப்படிப்பட்ட கடல் சார்ந்த உணவுகளில் இறாலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இறால் உணவுகளில் அதிக அளவு கனிம சத்தும் இருக்கின்றது. இந்த கனிமச்சத்து ரத்தத்தில் ஆக்சிஜன் கலப்பதற்கு அதிக அளவு உபயோகப்படுகிறது. இந்த இறால் மிளகு வறூவல் மிகவும் சுவையுடையதாக சுலபமாக எப்படி வீட்டில் தயார் செய்வதூ என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 12 கிலோ இறால்
  • 10 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் மிளகுதூள்
  • 12 ஸ்பூன் சீரகத்தூள்
  • 12 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்பொழுது கடைகளிலேயே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இருந்தாலும் நீரில் போட்டு இறாலை அலசிவிட்டு அதிலிருந்து ஓடுகள் இருந்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  2. கழுவி வைத்துள்ள  இறாலில்சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு  போட்டுபிசறி தனியாக வைத்து விட வேண்டும். ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு  மஞ்சள்தூள் போட்டு வைத்துள்ள இறாலை அலசி விட வேண்டும்.
  3. சுத்தம் செய்து வைத்துள்ள இறாலில் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
  4. அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  5. இறால் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டாம் இறால் கிளறிவிட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  6. அவ்வப்போது மூடியை திறந்து நாளை கிளறி விட்டுக் கொண்டிருக்கவும். தண்ணீர் வற்றி இறால் நன்றாக வெந்த பிறகு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி கிளறி விடவும்.
  7. அவ்வளவுதான் பரிமாறுவதற்கு சுவையான ருசியான இறால் மிளகு வறுவல் தயார்.