கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?

Summary: இன்று கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்றவாறு மீன் சுக்கா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் சுக்கா செய்யப் போகிறோம். நீங்கள் இந்த வஞ்சரம் மீனில் சுக்கா செய்வதால் முள் இருக்குமோ என்ற பயம் வேண்டாம் வஞ்சரம் மீனில் முள் இருக்காது. ஆகையால் முள் இருக்குமோ என்ற பயம் இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி உங்களை இதே போல் செய்ய சொல்லும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த வஞ்சரம் மீன் சுக்கா இருக்கும்.

Ingredients:

  • 3 மேசை கரண்டி சோள மாவு
  • 2 மேசை கரண்டி அரிசி மாவு
  • ½ tbsp உப்பு
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp மிளகு தாள்
  • தண்ணீர்
  • ½ KG வஞ்சரம் மீன்
  • 100 ML எண்ணெய்
  • 4 tbsp எண்ணெய்
  • 1 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tbsp சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbdp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp சீரகத் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு
  • ½ டம்பளர் தண்ணீர்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் மூன்று மேசை கரண்டி அளவு சோள மாவு, இரண்டு மேசை கரண்டி அளவு அரிசி மாவு, அரை டீஸ்பூன் உப்பு, அரை பழம் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் நாம் துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கும் வஞ்சிரம் மீனை இந்த பேஸ்ட் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து ஒரு 20 நிமிடங்கள் பவுளை மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 100 ML அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நம்ம ஊற வைத்த மீனை சேர்த்து அனைத்து பக்கமும் வேகும் மாறு திருப்பி விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் மீன் காபி நிறமாக மாறியதும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு பின் கடாயில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தது ஒரு பட்டை, 4 கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து ஐந்து வினாடிகள் வதக்கி கொள்ளவும்.
  5. பின் கடாயில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கிய ஒரு பெரிய தக்காளியை சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவும்.
  6. பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் மல்லி தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா பொருட்களை வதக்கி கொள்ளவும்.
  7. பின் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் வந்து கிரேவி கொதிக்கும் பொழுது நாம் பொரித்து வைத்திருக்கும் வஞ்சரம் மீனை இதனுடன் சேர்த்து நான்கு பிரட்டி விட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  8. அதன் பின் கிரேவி வற்றி வஞ்சரம் மீன் மசாலாவுடன் நன்கு சேர்ந்ததும், சிறிதளவு கொத்தமல்லியை தூவி விடுங்கள், அவ்வளவு தான் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா இ்னிதே தயாராகிவிட்டது.