நாவில் எச்சி ஊறும் சுவையில் டூனா மீன் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள்.ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது.தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனாமீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும். சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும்உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையைபின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ டூனா மீன்
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பற்கள் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொடிகளைச் சேர்த்து கலந்து விடவும். பிறகு டூனாவைச் சேர்க்கவும்.
  4. அத்துடன் நீளமாகக் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.நன்றாகக் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. சுவையான டூனா மசாலா ரெடி.