காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்! பார்ந்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: ஆந்திரா பெப்பர் சிக்கன்க்கு தனித்துவமான சுவை மற்றும் நிறத்தை அளிக்கிறது. . இது பொதுவாக சாதம், ரொட்டிஅல்லது நானுடன் பரிமாறப்படும். விருந்துக்கு சமைக்க ஆந்திரா பெப்பர் சிக்கன் அருமையாக கைகொடுக்கும்.  ஆந்திராபெப்பர் சிக்கன் செய்வது மிகவும் எளிது.  இதுஒரு சிறந்த விருந்து சிற்றுண்டியாகும், உங்களுக்கு காரமான உணவுகளில் விருப்பம் இருந்தால்,இது ஆந்திரா பெப்பர் சிக்கன்உங்களுக்கு ஏற்றது . ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபியானதுகருப்பு மிளகு மிளகுத்தூள் சுவைகளுடன் நிரம்பியுள்ளது. வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

Ingredients:

  • 500 கிராம் சிக்கன்
  • 10 பற்கள் பூண்டு
  • 2 இன்ச் இஞ்சி
  • 1 எலுமிச்சை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 வெங்காயம்
  • 4 பற்கள் பூண்டு
  • 1 இன்ச் இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • டீஸ்பூன் மல்லித் தூள்
  • டீஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிக்கனுடன் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
  3. பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து, வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அப்போது கறிவேப்பிலையையும் போட்டு வதக்க வேண்டும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும், ஊற வைத்துள்ள சிக்கனைப்போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் மல்லித் தூள், பொடித்த மிளகு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். பின் சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வையுங்கள்.
  5. சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து. அதில் நீர் இருந்தால் அதை வற்ற வைத்து இறக்குங்கள். பின் அதன் மேல் பொடித்த மிளகு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டினால்,
  6. சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் தயார்