மதிய உணவுக்கு ஏற்ற பக்காவான அவரைக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!

Summary: அவரைக்காய் பொரியல், இந்த அவரைக்காய் இருக்கிறது அவரைக்காய் சாப்பிடுவதால்அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரிசெய்கிறது. , அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டுவந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை.குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில்ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் பொரியல்கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும்.

Ingredients:

  • 1/4 கிலோ அவரைக்காய்
  • 1 கைப்பிடி வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 தேக்கரண்டி வேர்க்கடலை
  • 1 தேக்கரண்டி அரிசி
  • கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அரிசியையும்,வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  3. பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் அவரைக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  4. அவரைக்காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
  5. சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.