தெருவே கமகமக்கும் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நெத்திலி கருவாடு பயன்படுத்தி செய்த கருவாட்டு குழம்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக நம் மீன் குழம்பு செய்யும்போது அதனுடன் எந்தவித காய்கறியும் சேர்க்காமல் செய்வோம் ஆனால் கருவாட்டு குழம்பு நாம் செய்யும் போது அதனுடன் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து செய்தால் தான் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி காய்கறிகளை பயன்படுத்தி தான் இன்று சுவையான கருவாட்டு குழம்பு செய்யப் போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த கருவாட்டு குழம்பு செய்து கொடுங்கள் பின் அனைவரும் உங்களை அடிக்கடி இதே போல் கருவாட்டு குழம்பு செய்ய சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

Ingredients:

  • 3 tbsp நல்லெண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp வெந்தயம்
  • ½ tbsp சீரகம்
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 2 tbsp மல்லி தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • புளி
  • 1 கப் தண்ணீர்
  • 200 கிராம் நெத்திலி கருவாடு
  • 2 முருங்கைகாய்
  • 4 கத்தரிக்காய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் நெத்திலி கருவாட்டை ஒரு பெரிய பவுளில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின்பு அதே பவுளில் பாதியளவில் சூடான நீரை ஊற்றி ஒரு 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து சொள்ளவும், பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு, வெந்தயம், சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கடுகு பொரிந்ததும் நாம் தோலுரித்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து கடாயை ஒரு இரண்டு நிமிடம் மூடி வைத்து விடுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  5. பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் மற்றும் கடைசியாக காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியது பின் நம் ஊற வைத்த புளியை கரைத்து புளி கரைசல் தயார் செய்து அதையும் இதனோடு சேர்த்து மேலும் ஓரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  6. பின்பு குழம்பு நன்கு கொதித்து வந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் முருங்கைக்காய் மற்றும் கடைசியாக நாம் ஊற வைத்த கருவாடு சேர்த்து கடாயை மூடி வைத்துவிட்டு ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கருவாட்டு குழம்பு இனிதே தயாராகி விட்டது.