மதுரை ஸ்பெஷல் ருசியான முள்முருங்கை வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: கிராமப்புறங்களில் கிடைக்கிற முள்முருங்கை அதாவது கல்யாண முருங்கை அப்படின்னு சொல்ற இலையை வச்சு ரொம்பருசியான ரொம்ப ஆரோக்கியமான வடை ஒன்னு செய்யப் போறோம். மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடைஎப்படி செய்வது அப்படின்னு பார்க்க போறோம். குடும்பத்தில் யாராவது சளி பிரச்சனை இருந்தாலோஇருமல் தொல்லை இருந்தாலும் நாள்பட்ட சளி இருந்தாலும் இந்த முள் முருங்க இலையில் தேசை,அடை, வடை, பூரி போன்றவை செய்து கொடுத்து இந்த முள் முருங்கை இலை சளி பிரச்சனைகளை தீர்த்துவைக்கும். முள் முருங்கை இலையில் தோசை போன்றவை செய்வார்கள்.

Ingredients:

  • 2 கப் முள் முருங்கை இலை
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் பச்சரிசி மாவு
  • உப்பு
  • 2 ஸ்பூன் உளுந்து
  • 2 காய்ந்தமிளகாய்
  • 4 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி இட்லி அரிசியாகவோ அல்லது புழுங்கல் அரிசியாகவோ இருக்கலாம். பின்பு முள் முருங்கை இலையை நரம்புகள் நீக்கி வெறும் இலையைமட்டும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. இட்லி அரிசி ஊறுவதற்குள் நாம் முள் முருங்கை வடையின் மேல் துவங்கக்கூடிய பொடியை தயார் செய்து கொள்ளலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைக்கவேண்டும்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து அதோடு வறுத்த உளுந்தும் காய்ந்த மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. நாம் இந்த வடையில் காரம் எதுவும் சேர்க்கப் போவதில்லைஇந்த பொடி மட்டுமே காரமாகையால் காய்ந்த மிளகாய் உங்கள் விருப்பம் போல நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் பொட்டுக்கடலை அதிகமாக சேர்த்தாலும் சுவை அருமையாக இருக்கும்
  5. அரிசி ஊறியபிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் அரிசியை கழுவி விட்டு நீரை முழுவதும் வடித்து விட்டுமிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.  அரிசி கொரகொரப்பாக அரைந்த பிறகு அதில் முள் முருங்கை இலை சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  6. நீர் அதிகமாக சேர்க்கக்கூடாது இந்த வடை மாவு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான்வடை தட்டி பொரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு பச்சரிசி மாவு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  7. பிறகு ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இந்த முள்முருங்கை மாவை சிறுசிறு உருண்டைகளாக கையில் எடுத்து நன்றாக வட்ட வடிவமாக தட்டி எண்ணெயில்போட்டு பொரிக்க வேண்டும்.
  8. நன்றாக உப்பி வரும் வடைகளை திருப்பி போட்டுபொரித்து எடுக்கவும். இதே போல் எல்லா வடைகளையும் தட்டிபொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  9. பொரித்த வடைகள் மேல் பொடித்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் உளுந்து பொட்டுக்கடலை பொடியை தூவி பரிமாறினால்சளிக்கு தீர்வு தரக்கூடிய ஆரோக்கியமான சுவையான முள் முருங்கை வடை தயார்.