காலை டிபனுக்கு பாலக் பூரி இப்படி செய்து பாருங்க! இதை விட ஒரு ஹெல்தியான பூரி இருக்கவே முடியாது!

Summary: பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்குவகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கர்ப்பப்பைசார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல மருந்து.  இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள்இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடுஉடலுக்கு நல்ல குளுமையை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக்பூரி எப்படி சுடுவதுஎன்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கட்டு பாலக் கீரை
  • எண்ணெய்
  • 1 தேக்கரண்டி ரவை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. பாலக் கீரையை சுத்தம் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. கோதுமை மாவில் ரவை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.அரைத்த கீரையை மாவுடன் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
  3. தேவையெனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  4. சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து சிறு வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான பாலக் பூரி ரெடி.