சாதத்துடன் சேர்த்து சாப்பிட இப்படி காரசாரமான வெண்டைக்காய் கறி இப்படி செய்து பாருங்க!

Summary: வெண்டைக்காயை வைத்து சூப்பராகமணக்க மணக்க வெண்டைக்காய் கறி வித்தியாசமாக செய்யலாம். இந்த வெண்டைக்காய் கறி சாதத்தில்சேர்த்து செய்தல் அருமையாக இருக்கும்.  இந்தரெசிபி லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பரான ரெசிபி. சப்பாத்தி ,நான் கும் அருமையாக இருக்கும்.குழந்தைகளுக்கு இப்படி வெண்டைக்காய் கறி செய்து கொடுத்தால், காய்கறிகளோடு அந்த சாதத்தைவிருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம். காலை அவசரஅவசர சமையலில் இது ஒரு சுலபமான ரெசிபி. இந்த  சுவையான வெண்டைக்காய் கறி எப்படி எளிதாக செய்வது? என்பது போன்ற குறிப்புகளைஇப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 4 மிளகாய் வற்றல்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
  2. தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் போட்டு வெண்டைக்காயை போட்டு வதக்கவும். வதக்கின வெண்டைக்கயை 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  4. பின்னர் திறந்து அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
  5. அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீரை தெளித்து விட்டு பிரட்டி 3 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
  6. சுவையான எளிதில் செய்யக்கூடிய வெண்டைக்காய் கறி ரெடி.