குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!

Summary: சன்னா மசாலா, மசாலாப் பொருட்களால் செய்யப்படும்ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும்கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச்செய்து, இந்த சைவ சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.  வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில்இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும்

Ingredients:

  • 1 கப் சன்னா
  • 1 குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
  • 1/4 தேக்கரண்டி கசூரி மேத்தி
  • 1/4 தேக்கரண்டி ஆம்சூர் பவுடர்
  • 2 சிட்டிகை சாட் மசாலா
  • 2 பிரிஞ்சி இலை
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சன்னாவை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
  3. இந்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட்டு சாட் மசாலா தவிர்த்து எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும்.
  4. 5 நிமிடம் வதக்கி வேக வைத்த கடலையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைத்து 8 நிமிடம் வேக விடவும்.
  5. (கடலையில் உப்பு சேர்த்து வேக வைத்திருப்பதால் குறைவாகவே சேர்க்கவும்) வரை திறந்து வைத்து வேக விடவும். சாட் மசாலா கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.