Summary: பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான சௌ சௌ தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இந்த சௌ சௌ தயிர் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான சௌசௌ தயிர் கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.