காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கனவாய் மீன்  வறுவல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Summary: கனவாய் மீன்களுக்கு முள்ளும் கிடையாது முதுகெலும்பும் கிடையாது. இந்த மீன்கள் பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போலவே இருக்கும் . இந்த கனவாய் மீனின் தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கும் அதன் சிறப்பு என்னவென்றால் தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கருப்பு நிற திரவத்தை பிச்சி அடித்து எதிரிகள் இடம் இருந்து தப்பித்துக் கொள்ளும். இந்த கனவாயை மீனவர்கள் வலை போட்டு பிடித்தால் கூட கிழிந்து விடும் அளவிற்கு இதன் சதைப்பகுதி மெல்லியதாக  இருப்பதால் தூண்டிலில் தான் பிடிப்பார்கள்.. சத்துக்களை உள்ளடக்கிய கனவாய் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/2 கிலோ கனவாய் மீன்
  • 2 ஸ்பூன் தனி மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கனவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுக்க வேண்டும். கனவாய் மீனில் இருக்கும் 8 கை போன்ற பகுதியைதனியாக பிரித்தால் தலை பகுதி தனியாக வந்துவிடும்.
  2. தலைபகுதி மேல லேசான சவ்வு போன்ற தோலை தனியாக உறித்து எடுக்கவும்.தலையின் அடிபகுதியில் சிறியதாக ப்ளாஸ்டிக் போல் நீண்டு இருக்கும் பகுதியை பிடித்து இழுத்தால் தலை பகுதியில் ப்ளாஸ்டிக் பட்டை போல் இருக்கும் பகுதி வெளி வந்து விடும்.
  3. பின் தலைக்குள் இருக்கும் கருப்பு நிற திரவத்தை சுத்தம் செய்ய வேண்டும். இவைகளை கட்டாயம் சுத்தம் செய்து கழுவ வேண்டும்.
  4. பின் இந்த தலை பகுதியை நறுக்கினால் வளையம் போல் வரும். இதே போல் அனைத்தையும் நறுக்கி கொள்ளவும். விருப்பம் உள்ளவர்கள் கை பகுதிகளையும் சேர்த்து கொள்ளலாம்.
  5. அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு  கறிவேப்பிலை  சேர்த்துதாளிக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும்.
  6. இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்  மஞ்சள்தூள் சேர்த்து கிளறி  பச்சைமிளகாய்,தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  7. பின் நறுக்கி வைத்துள்ள கனவாய் மீன்களை சேர்த்து உப்புபோட்டு வதக்கவும். கனவாய் மீன் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கனவாய் மீன்களை மூடி போட்டு ஒரு 15 நிமிடம் வேக வைக்கவும். ஓவ்வொரு 5 நிமிடத்திற்கும் மூடியை திறந்து கனவாய் மீன்களை கிளறி விடவும். இல்லை என்றால் அடிபிடித்து விடும்.
  8. தண்ணீர் வற்ற ஆரம்பித்தும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். எண்ணெய் மீனில் இருந்து பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டு இறக்கினால் அருமையான கனவாய் மீன் வறுவல் தயார்.