முருங்கைகீரையில் முட்டை சேர்த்து ருசியான பொரியல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: உடலில் பிரச்சனைகள் வருவதற்கான முதல் காரணமே ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் தான் இந்த முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் உடல்நலம்  வலுப்பெறுகிறது.முருங்கைக் கீரையில் உள்ள இரும்பு சத்து கண்பார்வைக்கும்,உடல் ஆரோக்கியத்திற்கும், ஹீமோகுளோபின் லெவலை அதிகரிப்பதற்கும், ரத்த சோகையை நீக்குவதற்கும், கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கும் காரணமாக இருக்கிறது. ஒருவர் உடம்பில் ரத்தம் சுத்தமாக இருந்தால் அவர் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்.

Ingredients:

  • 1 கட்டு முருங்கை கீரை
  • 3 முட்டை
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 3 காய்ந்தமிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முருங்கைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மூன்று முட்டைகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக  தாளித்துகொள்ளவும்.
  3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் நன்றாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக  முட்டைபொடிமாஸ் செய்வது போல பொரித்து எடுக்கவும்.
  5. முட்டை பாத்திரத்தில் ஒட்டாதது போல் வந்த பிறகு அதில் கீரையை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  6. ஒரு மூன்று நிமிடம் மூடி போட்டு வெந்தவுடன் மூடியை திறந்து விட்டு அதை நன்றாக கிளறி விடவும். இப்பொழுது முட்டையும் கீரையும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கும் பிறகு மூடி போட்டு வேக வைக்கவும்.அவ்வப்போது திறந்து கீரை நன்றாக கிளறவும். இந்த பொரியலில் முட்டை சேர்ப்பதால் தேங்காய் துருவல் சேர்க்க தேவையில்லை.
  7. முருங்கைகீரை நன்றாக வெந்த பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறினால் சத்தான முட்டை முருங்கைகீரை பொரியல் தயார்.இதை சாதத்திம் அல்லது அப்படியே சிற்றுண்டி போல் சாப்பிடும்போது மிகவும் சுவையாகவும் இருக்கும் நல்ல சத்துக்களும் கிடைக்கும்.