இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது கோழி, மீன், இறால், நண்டு என்று அடுக்கி கொண்டே போகலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை நண்டு. இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

Ingredients:

  • 1/2 கி நண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/2 கப் துருவிய தேங்காய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, மல்லி, ஏலக்காய், காய்ந்த மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து சிவக்க வறுத்து ஆற‌ வைத்துக் கொள்ளவும்.
  3. இவை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  7. குழம்பு கொதித்ததும் நண்டு சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.
  8. நண்டிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்து குழம்பு வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  9. அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான செட்டிநாடு ஸ்டைல் நண்டு மசாலா தயார்.