சுட சுட சோறுன் சாப்பிட ருசியான முட்டை பீட்ரூட் பொரியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Summary: வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி. உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 பீட்ரூட்
  • 2 முட்டை
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  2. கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. பீட்ரூட் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  5. பீட்ரூட் நன்கு வெந்ததும் ஒரு முட்டை சேர்த்து கிளறி தீயை சிறிதளவு வைத்து வேக விடவும்.
  6. முட்டை வெந்து இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான முட்டை சேர்த்த பீட்ரூட் பொரியல் தயார்.