சுரைக்காய் ஆட்டு குடல் கறி குழம்பு ருசியாக சுலபமாக இப்படி கூட செய்யலாம்!

Summary: மட்டன் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது சூடு இல்லாது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆகையால் இந்த மட்டனில் உள்ள அனைத்து உறுப்புகளும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதவிதமான உணவு வகைகளை  ஆட்டின் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஆட்டுக்குடலை வைத்து சுரைக்காய் உடன் சேர்த்து எப்படி குழம்பு செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த சுவையான சுரைக்காய் ஆட்டு குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

Ingredients:

  • 1 ஆட்டு குடல்
  • 1 கப் சுரைக்காய்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் தேங்காய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இப்போது கடைகளிலேயே ஆட்டு குடலை சுத்தம் செய்து கொடுக்கிறார்கள். அப்படி கொடுக்கவில்லை என்றால்  சுண்ணாம்பைபிரித்து ஆட்டுக் குடலில் இரண்டு உறுப்புகள் இருக்கும் பெரியதாக இரைப்பை ஒன்றும் சிறிய குடல்கள் கொஞ்சமும் இருக்கும்.
  2. அந்த பெரியதாக இருக்கும் இரைப்பை மேல் ஒரு கருமை நிற படலம் ஒன்று இருக்கும் ஆகையால் சுண்ணாம்பு பசையை எடுத்து அந்த குடல் மேல் நன்றாக தேய்த்து துணியை கசக்குவது போல் கையால் தேய்த்தோம் என்றால் அந்த கருப்பு முழுவதும் கரைந்து விடும்
  3. பிறகு இரைப்பையை  திருப்பி   அதேபோல்  சுண்ணாம்பினால்சுத்தம் செய்து கழுவி தனியாகவைக்க வேண்டும்.சிறு சிறு குடல்கள் கொடுத்திருப்பதை ஒரு ஈக்கு குச்சியை வைத்து திருப்பி அதில் உள்ளே உள்ள கொழ கொழப்பான பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு இவைகளை நன்றாக தண்ணீரில் கொள்ள வேண்டும்.
  4. கழுவிய  உடன் இவைகளை நறுக்குவது கடினமாக இருக்கும். ஆகையால் இந்த சுத்தம் செய்த ஆட்டுக்குடலை அடுப்பில்  பாத்திரம் வைத்து  அதில் சுத்தம் செய்த ஆட்டின் குடல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நீர் சூடானதும் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் ன, உப்பு சேர்த்து ஆட்டுக்குடலை அதில் வைத்து மூடி போட்டு வேக வைகக் வேண்டும்
  5. ஆட்டுக்குடல்  வெந்த உடன் வடிகட்டி எடுத்துவிட்டு ஆறிய பிறகு சிறுசிறு துண்டுகளாக அறிந்த எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.தேங்காய் சிறிதளவு சோம்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  6. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதனோடு கறுவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு வெங்காயம் ,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. அதில் ஆட்டுக்குடல் , சுரைக்காய், ஊற வைத்த கடலைப்பருப்பையும்சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து மிளகாய் தூளின் வாசனை போகும் வரை வேக வைக்க வேண்டும். நன்றாக சுரைக்காய் வெந்து  மிளகாய்தூள்பச்சை வாசனை போனதும் அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காயை குடல் குழம்பில் சேர்க்கவும்.
  8. குழம்பில் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்தால் சுவையான சுரைக்காய் ஆட்டுக்குடல் குழம்பு   தயார்..