வாழைத்தண்டு பொரியல் இனி இப்படி செய்யுங்கள் இதன் சுவை அலாதியாக இருக்கும்!

Summary: வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை வைத்து சுவையான பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். இந்த வாழைத்தண்டு பொரியல் உடலுக்கு நம்மை கொடுக்கின்றது.. இந்த வாழைத்தண்டு சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்துகிறது. வாழைதண்டில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நமக்கு செரிமான பிரச்சனையை தீர்த்து மலச்சிக்கலை குறைக்கின்றது. இந்த வாழைத்தண்டை சூப், பொரியல், கூட்டு போன்றவை வைத்து சாப்பிடும் போது  சத்துக்கள்கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு பொரியலை மிக எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் வாழைத்தண்டு
  • 1 வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து அதில் உள்ள நாரை பிரித்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீர் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. காரணம் வாழைத்தண்டில் இருக்கின்ற இரும்பு சத்து சீக்கிரமாக வாழைத்தண்டை கருத்து போக செய்து விடும் ஆகையால் அதை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். சிலர் மோரில் போட்டு வைப்பார்கள்.
  3. பிறகு அடுப்பில் ஒரு வானொலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் போட்டு பொறிந்ததும் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  ஊறவைத்த கடலை பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
  4. பின் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு பொடியாக அறிந்து வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கலந்து விட்ட வாழைத்தண்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  5. வாழைத்தண்டு நன்றாக வெந்த பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் ருசியான சத்தான வாழைத்தண்டு பொரியல் தயார்.