மொறு மொறுனு இறால் பஜ்ஜி எப்படி செய்வது ?

Summary: மாலை நேரங்களில் ஸ்பெஷலாக முக்கியமாக அசைவ பிரியர்களுக்கு பிடித்த அருமையான சுவையில் டீ யுடன் சாப்பிட ஏற்ற ஸ்னாக்ஸ். ஒரு முறை இது போன்று மொறு மொறுனு இறாலை வைத்து ஸ்னாக்ஸ் செய்யலாம். ஆம் இன்று இறால் பஜ்ஜி செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த இறால் பஜ்ஜியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாகவும் மொறு மொறுவென்று இருக்கும். இதை எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள் என்ன என்பது கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Ingredients:

  • ½ கிலோ இறால்
  • 2 கையளவு மைதா
  • 1 கையளவு அரிசி மாவு
  • 1 கையளவு சோள மாவு
  • உப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின்பு ஒரு மிக்சியில் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, மற்றும் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. அதன் பிறகு அடுப்பில் ஒரு கடையை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த இறால் துடுகளை அதே மாவில் நன்கு புரட்டி கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. இப்பொழுது சுவையான இறால் பஜ்ஜி தயார்.
  6. (குறிப்பு) தேவைப்பட்டால் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.