சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட ருசியான சுண்டைக்காய் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Ingredients:

  • 1 கப் சுண்டைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் நல்லெண்ணெய்
  • 2 தக்காளி
  • புளி
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சுண்டைக்காயை கழுவி, கொஞ்சம் தட்டிக் கொள்ளவும்.
  2. தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதன்பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  6. அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு, சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. சுண்டைக்காய் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி எண்ணெய் பிரிய வேகவிடவும்.
  8. பிறகு கடைசியில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  9. குழம்பு கொதித்து, பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  10. அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் தொக்கு தயார்.