ரோட்டுகடை ஸ்டைலில் மசாலா பொரி வீட்டில் செய்து அசத்துங்கள்! மாலை நேரம் பக்காவான ஸ்நாக்ஸ்!

Summary: மசாலா பொரியை வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப சுலபமா செய்து சாப்பிட போறோம். இந்த மசாலா பொரி என்னதான் நம்ம  இந்தமாதிரி ஜன்க் ஃபுட்ஸ் சாப்பிடக்கூடாது அப்படின்னு ஒரு எண்ணம் வைத்திருந்தாலும் அந்த உணவை பார்க்கும் போது  சாப்பிடஎண்ணம் தோன்றும். விருப்பப்பட்ட உணவுகளை அளவுகளை கம்மியா  நாமேசெய்து சாப்பிடும் பொழுது அது நமக்கு ஒரு நல்ல சந்தோஷத்தை கொடுக்கும். அப்படிங்கிற பட்சத்தில் இந்த மாதிரி மசாலா பொரிகளை வீட்டிலேயே செய்து சந்தோஷமா குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டோம்னா ரொம்ப நல்லா இருக்கும்.வாங்க இந்த மசாலா பொரி எப்படி செய்வது அப்படிங்கறது பார்க்கலாம்.

Ingredients:

  • 2 கப் பொரி
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் வெள்ளரிக்காய்
  • 12 கப் மிக்ஸ்ர்
  • 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 ஸ்பூன் பச்சைமிளகாய் சாஸ்
  • எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி போன்றவைகளை பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .
  2. பிறகு அடுப்பில் ஒரு வானலியில் வைத்து அதில் எண்ணெய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சூடானதும் பொரியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  3. பொரி நன்றாக சூடாகி மஞ்சள்தூள் பொரிகளின் மீது பட்ட பிறகு அடுப்பை அணைத்துவிட்டவும்.
  4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,தக்காளி , வெள்ளரிக்காய் கேரட் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  5. மிக்ஸ்ஸரை பொரியோடு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  6. பிறகு பச்சைமிளகாய் சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கலந்து விட வேண்டும்.