சுட சுட ருசியான பூசணிக்காய் சூப் இப்படி வீட்டில் செய்து கொடுத்தால் டம்பளர் டம்பளராக குடிபாங்க!

Summary: காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். பூசணிக்காய் அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெரியவர்கள் விரும்பி சாப்பிட்டாலும் குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூசணிக்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் சீக்கிரம் வயதாவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது.

Ingredients:

  • 1 கப் பூசணிக்காய்
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் பெரிய வெங்காயம்
  • 3/4 கப் பால்
  • 1/2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பூசணிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்னர் வெங்காயம், பூண்டு, பூசணிக்காய், கேரட், பாதாம், பால், தண்ணிர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. காய்கறிகள் நன்கு வெந்த பிறகு அதை ஒரு மிக்சியில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  5. அதன்பிறகு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. இவை நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பூசணிக்காய் சூப் தயார்.