Summary: இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடைக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக சமோசா உள்ளது.