மதியம் சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான வாழைக்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தினமும் ஒவ்வொரு வீட்டிலும் பல வித உணவுகளைசமைக்கின்றனர். ஆனால் ஒரு சில நாட்களில் ஒவ்வொரு காய்கறிகள் கிடைப்பதில்லை. எந்த சீஸனில்எந்த காய்கறிகள் கிடைக்கின்றதோ அதனை வாங்கி சமைப்பதுதான் அனைவரின் வழக்கமாக இருக்கும்.ஆனால் வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும்.எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். இதில் பஜ்ஜி, , வறுவல்என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும்மிகவும் சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் தொட்டுக்கொண்டுசாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 3 வாழைக்காய்
  • 1/4 மூடி தேங்காய் துருவல்
  • 2 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 சின்ன வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • உப்பு
  • 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கடுகு
  • உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வாழைக்காயை கழுவி , தோல் சீவி . சிறுது கனமாக வெட்டி கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் மஞ்சள் சிறிது உப்பு சேர்த்து , கொதித்ததும், வாழைக்காயை சேர்த்து வேகா விடவும்..
  3. வெந்ததும், தனியாக தெண்ணீரில் இருந்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடவும்.
  5. வெந்தகாயைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கழித்து அரைத்த மசாலா சேர்த்து, சுருள வதங்கியதும் இறக்கவும்