இட்லி தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமாக மாதுளை பழ சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா! அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா!‌ அப்படியானால் ஒரு வித்தியாசமான சட்னியாக மாதுளை சட்னியை செய்யுங்கள். இந்த மாதுளை சட்னி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இந்த சட்னி வேலை முடிந்து வீட்டிற்கு சோர்வாக வருபவர்கள், வேகமாக செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சொல்லப்போனால், இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபியும் கூட மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் இதில் நிறைந்துள்ளன.

Ingredients:

  • 1 மாதுளை
  • 15 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • புளி
  • 3 வர மிளகாய்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 வர மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மாதுளையை கழுவி அதன் முத்துக்களை தனியே எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் தக்காளி, சின்ன வெங்காயம், உப்பு, வரமிளகாய், புளி, மற்றும் மாதுளையை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் இதில் வர மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  5. அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  6. அவ்வளவுதான் சுவையான மாதுளை சட்னி தயார்.