டிபன் பாக்ஸில் கொடுத்து விட அருமையான பச்சை பட்டாணி தக்காளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளிபட்டாணி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத்,தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  மசாலா வாசம் இல்லாமல், லேசான மசாலா வாசத்தில் ஒரு தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில்உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த தக்காளி சாதத்தை செய்து கொள்ளலாம்.ஆனால் அவரவர் வீட்டு அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்வதும், விசில் வைப்பதும் மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

Ingredients:

  • 2 கப் அரிசி
  • 4 தக்காளி
  • 1 வெங்காயம்
  • 1/2 கப் பட்டாணி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • உப்பு
  • 2 கப் தண்ணீர்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு மையாக அரைத்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கியபின், நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கியதும், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கி கொள்ளவும்.
  3. மேலும் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் பேஸ்ட்டாக அரைத்த இஞ்சி பூண்டு கலவையை போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் நன்கு வதக்கியபின், பட்டாணியை போட்டு சில நிமிடம் நன்கு கிளறி விடவும்.
  4. பின்னர் கிளறி விட்ட பட்டாணியானது நிறம் மாறிய பின், அதில் தக்காளி சாஸ், ருசிக்கேற்ப உப்பு தூவிய பின் நன்கு சில நிமிடம் நன்கு வதக்கியதும், சுத்தம் செய்த அரிசியை போட்டு, மசாலா அரிசியில் நன்கு படும்படி கிளறி விடவும்.
  5. கடைசியில் கிளறி விட்ட கலவையுடன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், மூடி வைத்து நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான தக்காளி பட்டாணி சாதம்.