யம்மியான ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக் இப்படி வீட்டிலயே செய்து அசத்துங்கள்!

Summary: ஓரியோபிஸ்கெட் மில்க் ஷேக், குழந்தைகளுக்குமே அம்மா நமக்காக மில்க் ஷேக் செய்து கொடுத்திருக்காங்க இதை பத்தி அவங்க வெளியில சொல்றதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எனக்கு எங்க அம்மா மில்க் ஷேக் செய்து கொடுத்தாங்க தெரியுமா அப்படின்னு உங்கள பத்தி அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் ரொம்ப பெருமையா பேசுவாங்க. இந்த மாதிரி மில்க் ஷேக் மாதிரி பண்ணி சாப்பிட்டும் போது  இன்னும் ரொம்ப  சந்தோஷத்தையும் சுவையும் நமக்கு கொடுக்கும். எப்போதும் பண்ற விஷயத்தை வேற மாதிரி பண்ணி சாப்பிட போறோம். எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 2 பாக்கெட் ஓரியோ பிஸ்கட்
  • 1 கப் பால்
  • 1 டெய்ரி மில்க் சாக்லேட்
  • 1 கப் ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஓரியோ பாக்கெட்டில் இருந்து பிஸ்கட் எடுத்துக்கொண்டு அவர்களை இரண்டு நான்கு துண்டுகளாக உடைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள ஓரியோ பிஸ்கட்டுகளில் இருந்து 2 ஸ்பூன் எடுத்து வைத்த கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் மீதமுள்ள பொடித்த ஓரியோ பிஸ்கட்டுகளில்  காய்ச்சி ஆற வைத்த ஒரு கப் பாலை சேர்த்து அரைக்கவும்.
  3. பின் அதனோடு டெய்ரி மில்க் சாக்லேட்டை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்து  மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின் மிக்ஸி ஜாரில்  ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
  5. பிறகு ஜூஸ் கிளாஸ் ஓரியோ பிஸ்கட் மில்க் ஷேக் ஊற்றி அதன் மேல் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள ஓரியோ பிஸ்கட் துகள்களை போட்டு ஒரு ஓரியோ பிஸ்கட்டை விளிம்பில் நிற்கும்படி வைத்து சுவைத்தால் சுவையான ஓரியோ மில்க் ஷேக் தயார்.