சுவையான பக்கோட குழம்பு செய்வது எப்படி ? புதுமையாக செய்து பாருங்கள் வாங்க.

Summary: புதுமையாக இந்த பக்கோடா குழம்பு செய்து பாருங்கள். மேலும் நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு சாம்பார் மட்டும் வைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருக்கும் உங்களுக்கு இது மாதிரியான உணவுகளுக்கு இந்த பக்கோடா குழம்பு தயார் செய்து சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது புதுமையாக இருக்கும். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக கூட இருக்கும். இப்பொழுது இந்த பக்கோடா குழம்பு மிகவும் எளிமையாகவும் எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள், மற்றும் செய்முறைகளை இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 2 பெரிய வெங்கயம்
  • 2 தக்காளி
  • புளி
  • உப்பு
  • கொத்தமல்லி
  • 1 tbsp மஞ்சள்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 2 tbsp மல்லித்தூள்
  • ½ கப் கடலை பருப்பு
  • 1 tbsp சோம்பு
  • 2 மிளகாய்
  • 4 பற்கள் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி
  • ¼ கப் தேங்காய் துருவியது
  • ½ tbsp சோம்பு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 piece பட்டை
  • 2 piece கிராம்பு
  • கறிவப்பிலை
  • 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 mixer

Steps:

  1. முதலில் கடலைப்பருப்பை சமைப்பதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாகவே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலை பருப்பு, மிளகாய், சோம்பு, பூண்டு மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு வைத்துள்ள பொருட்களான வெங்காயம், உப்பு, கொத்தமல்லி இவைகளை சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய்யை ஊற்றி என்னை நன்கு சூடேறும் வரை காத்திருக்கவும்.
  5. அதன் பிறகு நாம் வைத்துள்ள பக்கோடா கலவையை உங்களுக்கு ஏற்றார் போல் சைஸில் எடுத்து சூடறிய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. பின்பு மறுபடியும் மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  7. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடறியவுடன் தாளியப்பதற்காக வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு நன்றாக தாளித்து கொள்ளுங்கள்.
  8. பின்பு வெங்காயத்தை அதனுடன் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள், பின் தக்காளியை சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
  9. அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் புளி சாறையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  10. இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேங்காய் பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும் பின் நம் பொறித்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து விட்டு ஒரு 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு பின் இறக்கி வைத்து கொத்த மல்லியை மேலே தூவி விடவும் சுவையான பக்கோடா குழம்பு இனிதே தயாராகி விட்டது.