மிக்ஸ்டு வெஜிடபிள் பொரியல் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதமுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

Summary: பொதுவாக அனைத்து திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களில்கண்டிப்பாக இடம்பெறும் ஒரு வகை மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். முற்றிலும் காய்கறி கொண்டுஇது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். சில வீட்டுகல்யாணங்களில் பந்தியில், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் வைக்கிறார்கள்., அந்த பாரம்பரியமனம் மாறாமல், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படிசெய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.

Ingredients:

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பழுத்த தக்காளி
  • 50 கிராம் பச்சைப் பட்டாணி
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்பொடி
  • 1 டீஸ்பூன் கறி மசாலாத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் நறுக்கிக்கொள்ளவும். துண்டுகளாக பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும்,
  2. வெங்காயத்தை நீள நீளமாகவும், ஒரு தக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும்.
  3. வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம், தக்காளிப் பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும்.
  4. உருளைக்கிழங்கு,பச்சைப் பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்.
  5. பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும்.பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத்தூவலாம்.