ஆரோக்கியமும் ருசியும் கூடிய ஆடி கும்மியானம் அல்லது ஆடி கும்மாயம் இப்படி செய்து பாருங்க!

Summary: ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த கும்மாயத்தை செய்து பெண்களுக்கு கொடுக்கும்பொழுது அவர்களுக்கு இரும்பு சத்து அதிகமாக கிடைப்பது மட்டுமல்லாமல் இரத்தசோகை பிரச்சினை எலும்பு பிரச்சனை கர்ப்பபை பிரச்சனைகள் என அனைத்தும் சரியாகிறது.ஆடி மாதத்தில் பூஜைக்கு என்று மட்டுமல்லாமல் முடிந்த அளவிற்கு வாரத்தில் ஒரு நாளாவது செய்து அனைவரும் உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். இந்த ஆடி மாத கும்மாயம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 6 ஸ்பூன் பாசி பயிறு
  • 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 ஸ்பூன் கடலை பருப்பு,
  • 4 ஸ்பூன் தட்டாம் பயிறு
  • 4 ஸ்பூன் கொண்டைக் கடலை
  • 4 ஸ்பூன் கொள்ளு
  • 6 ஸ்பூன் சம்பா பச்சரிசி
  • 3 ஸ்பூன் வேர்க்கடலை
  • 3/4 கப் கருப்பட்டி
  • 1 சிட்டிகை ஏலக்காய்
  • 3 ஸ்பூன் நெய்
  • 1/4 ஸ்பூன் சுக்கு
  • 6 முந்திரி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வானெலியை வைத்து சூடாகியதும் எடுத்து வைத்துள்ள அரிசி மற்றும் பயிறுளை தனி தனியாக இட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
  2. நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அரிசி மற்றும் பயிறு வகைகள் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துரவை பத்திற்கு அரைத்த எடுத்து கொள்ள வேண்டும்.
  3. பின் குக்கரில் 12 கப்  அளவிற்குஅரைத்து வைத்துள்ள மாவை எடுத்து கொள்ள வேண்டும்.12  கப்மாவிற்கு  2 கப்தண்ணீர் சேர்த்து  குக்கரில்3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  4. கருப்பட்டியில் 14  கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் எடுத்து வடிகட்டி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு வேக வைத்து எடுத்துள்ள மாவில் கருப்பட்டியை சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறவும்.
  5. கொதித்து திக்காக வந்ததும் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி , நெய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.விருப்பம் இருந்தால் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம்.
  6. நன்றாக அனைத்தும் கலந்து வந்த உடன் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து பரிமாறினால் சூடான சத்துமிக்க சுவையான ஆடி கும்மாயம் தயார்.