பல காய்கறிகளை சேர்த்து இப்படி தேங்காய் பால் பலகறி குழம்பு செஞ்சி பாருங்கள்!

Summary: பல காய்கறிகளை சேர்த்து சுவையான தேங்காய் பால் பல கறி குழம்புசெய்ய போகிறோம். தேங்காய் பால் சேர்த்து பல காய்கறிகளை போட்டுஇந்த குழம்பு செய்வதால் இது மிகவும் சத்துள்ள குழம்பும் ஆரோக்கியமான குழம்பாகவும் இருக்க போகிறது. அதுவும் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப் புண், வாய் புண் , தொண்டையில் இருக்கும் புண்கள்,  உடல்சூடு போன்றவற்றை குறைக்க உதவும். தேங்காயில் இருக்கின்ற நல்ல கொழுப்புகள் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்க இருக்கின்றன.

Ingredients:

  • 2 கத்தரிக்காய்
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 கப் பீன்ஸ்
  • 1 வாழைக்காய்
  • 3 பச்சைமிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 மூடி தேங்காய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 பட்டை
  • 1/2 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Steps:

  1. முதலில் தேங்காயை துருவி எடுத்து கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி பாலை எடுத்து கொள்ளவும்.இப்படி முதலில் எடுத்து வைத்த தேங்காய் பாலை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  2. பிறகு இரண்டாவது முறை மிக்ஸி  ஜாரில்சேர்த்து சிறது நீர் விட்டு அரைத்து இந்த பாலை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  3. காய்கறிகளை ஒரே மாதிரி நீளத்தில் நறுக்கி கொள்ளவும். இல்லை என்றால் ஒவ்வொன்றும்  தனிதனி அளவுகளில் இருக்கும்.இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அதில் பட்டை , கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் சீரகம் , சோம்பு சேர்த்து பொரிந்ததும்  பொடியாகநறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு  பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின்பு ஒரே அளவாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறிவிட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பின்பு இரண்டாவதாக அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக  கலந்துமூடி போட்டு வேக வைக்கவும்.
  7. அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விட வேண்டும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் முதலில் எடுத்து. வைத்துள்ள கெட்டியான தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  8. கெட்டியான தேங்காய் பால் சேர்த்து ஒரு முறை கொதித்து வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து இறக்கினால்  சூடானருசியான தேங்காய் பால் பலகறி குழம்பு தயார்.