காலை டிபன் உடன் இப்படி மசால் வடை‌ செஞ்சி கொடுத்து பாருங்க இதன் மொறு மொறு ருசியே தனி தான்!

Summary: மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள். மசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

Ingredients:

  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • எண்ணெய்
  • 3/4 கப் கடலை பருப்பு
  • 3 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 துண்டு பட்டை
  • 2 இலவங்கம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி 3 மணி நேரம் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. பின்னர் கடலை பருப்பை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பின் இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டிக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த வடையை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  6. அவ்வளவுதான் சுவையான அட்டகாசமான மசால் வடை தயார்.