இரவு உணவுக்கு பக்காவான கோதுமை மிளகு தோசை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கோதுமையில்சப்பாத்தியா சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பு தட்டியவர்களுக்காக அதே கோதுமையை வைத்து மிளகு தோசை செய்து சாப்பிட வேண்டும். என்ன மிளகு தோசை இல்ல ரொம்ப  நிறையசத்துக்கள் இருக்கு  காலோரிகள்கம்மியா இருக்கிறது. ஆகையால் கோதுமையில் எந்த விதமாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். கோதுமை உணவோடு  உடற்பயிற்சிசெய்யும்போது கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. இந்த கோதுமை மிளகு தோசை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம். வெறும் கோதுமை மாவில் தோசை ஊற்றும் பொழுது ஒரு ரப்பர் போல ஒரு மாதிரி பசை போல்  இருக்கும். வாருங்கள் இந்த கோதுமை மிளகு தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  2. பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து மெலிதான தேசையாக ஊற்ற  வேண்டும். பின் தோசை மீது எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திரும்பி போட்வும்.
  4. இப்போது தோசை எடுத்து ப்ளேட்டில் வைத்து பரிமாறினால் சூடான ருசியான கோதுமை மிளகு தோசை தயார். இந்த தோசை தேங்காய் சட்னியுடன் அட்டகாசமாக இருக்கும்.