அடுத்தமுறை நெத்திலி மீன் வாங்கினால் மிஸ் பண்ணமாக இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!

Summary: சிக்கன், மட்டன் என்று இவற்றை அதிகமாக சாப்பிட்டாலும்,மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. பலரும் வீட்டில்செய்தாலும், கடைகளுக்கு சென்றாலும் பெரிய மீன்களை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவதுண்டு.ஆனால் இந்த நெத்திலி மீனில் உடம்பிற்குத் தேவையான எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கின்றதுஎன்று தெரியுமா? இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம்அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்துசாப்பிடலாம். வாருங்கள் இந்த நெத்திலி மீனில் மசாலாக்கள் சேர்த்து அசத்தலான சுவையில்செய்யும் நெத்திலி மீன் வறுவல், எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/2 கிலோ நெத்திலி மீன்
  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 2 கைப்பிடி அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • 1 கைப்பிடி சோள மாவு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. நெத்திலி மீனை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மிளகாய் தூள் 3 டீஸ்பூன், தனியா தூள் 3 டீஸ்பூன், எண்ணெய் போதுமான அளவு, உப்பு (தேவைக்கேற்ப), சோள மாவு ஒரு கைப்பிடி, அரிசி மாவு இரண்டு கைப்பிடி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. கலர் பொடி(தேவைப்பட்டால்) சேர்த்துக் கொள்ளலாம்.
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கலவையை போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. மேலும் சுவையூட்ட எலுமிச்சை சாறு விட்டால் நெத்திலி மீன் வறுவல் தயார்.