மதிய உணவுக்கு ஏற்ற கொத்தவரங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

Summary: உடலில்உள்ள நரம்புகளை வலுப்படுத்துவதற்கு கொத்தவரங்காய் உதவுகிறது. ஒழுங்காக ஜீரணமாகாவிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். கொத்தவரங்காயை சமைத்து சாப்பிடும் பொழுது கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து ஜீரண சக்தியை தூண்டுகிறது அதனால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும். கொத்தவரங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது  என்கிறார்கள்காரணம் கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. வாரத்திற்கு இருமுறை கொத்தவரங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் அதில் உள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது. இது எலும்பிற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி இதை உணவில் சேர்த்து கொண்டால் பலன் கிடைக்கும். காரணம் இது உடம்பில் உள்ள ரத்த சுரப்பை அதிகரிக்கிறது. ஆகையால் ரத்த சோகை குறைகிறது. மேலும் கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிடுவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களும் குறைவதற்கு உதவுகிறது.

Ingredients:

  • 1/4 கிலோ கொத்தவரங்காய்
  • 1 வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 4 காயந்தமிளகாய்
  • 2 ஸ்பூன் தேங்காய்துருவல்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கொத்தவரங்காயின் நுனி பகுதிகளை நறுக்க வேண்டும். முத்தல்  கொத்தவரங்காயாகஇருந்தால் இரண்டு பக்கமும் நார் போன்று வரும் அதை எடுத்து விட வேண்டும்.
  2. பின் கொத்தவரங்காயை சுத்தமாக நீர் விட்டு கழுவி விட வேண்டும். கழுவிய கொத்தவரங்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின்பு  அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கொத்தவரங்காய் மூழ்கும் அளவிற்கு நீர்விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து ,காய்ந்த மிளகாயௌ சிறு துண்டுகளாக் கிள்ளி போட்டு  பின்கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் வேக வைத்து எடுத்து வைத்துள்ள  கொத்தவரங்காயைசேர்த்து நன்றாக கலந்து விடவும். தேவை என்றால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
  6. கொத்தவரங்காய் நன்றாக கலந்ததும் அதில் நசுக்கிய பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து  நன்றாககலந்து விட்டு இறக்கி வேறு தட்டிற்கு மாற்றி பரிமாறினால் ருசியான  சத்துநிறைந்த கொத்தவரங்காய் பொரியல் தயார்.