அடுத்தமுறை இறால் வாங்கினால் கோங்குரா இறால் ப்ரை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அசைவப் பிரியர்களின் உணவில் முக்கியமாக இருப்பது கடல் உணவுகளே. அதிலும் இறால் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா இறால் செய்து சாப்பிடலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா இறால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 500 கி பிரான்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கப் புளிச்ச கீரை
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பிரானை சுத்தம் செய்து நன்கு கழுவி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைத்து விடவும்.
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புளிச்ச கீரையை சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.
  3. வதக்கிய கீரை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  4. அதன்பிறகு மற்றோரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  6. இரண்டு நிமிடங்கள் கழித்து ஊற வைத்த பிரானை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
  7. பின்னர் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்து விட்டு மீடி போட்டு கொதிக்க விடவும்.
  8. இறுதியாக தண்ணீர் நன்கு சுண்டி பிரான் வெந்ததும் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  9. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோங்குரா இறால்‌ தயார்.