பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய ஆரம்பத்து விடும் கண்ணால் பார்க்கும் பொழுதே சுவைத்த எண்ணம் தோன்றி விடும். அதை அப்படியே எடுத்து நாவில் வைக்கும் பொழுது நாம் சொர்க்கத்திற்கு சென்று விட்டது போல் தோன்றும்.அப்படி நாவில் நிற்கும் ப்ரெட் அல்வாவை ப்ரெட் இல்லாமல்  எப்படி செய்வது? பிரியாணி என்றாலே அதில் வைக்கும் இனிப்பிற்கு ப்ரெட் அல்வாவை தான் தேர்ந்தெடுப்போம். என்ன தான் பாய் விட்டு பிரியாணி இருக்குது என்றாலும் முதலில் தேடுவதற்கு என்னவோ ப்ரெட் அல்வா தான் காரணம்.

Ingredients:

  • 1 கப் மில்க் ரஸ்க் பவுடர்
  • 1/2 கப் இனிக்காத கோவா
  • 1/2 கப் நெய்
  • 1 கப் பால்
  • 1 கப் வெந்நீர்
  • 3/4 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 2 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • 4 ஸ்பூன் உலர்ந்த பழங்கள்
  • 1 ஸ்பூன் முலாம்பழம் விதைகள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் 10  முதல் 15 பால் ரஸ்கை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாகக் ஆஅரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  2. பின்னர் ஒரு கடாயில் உலர்ந்த பழங்களான முந்திரி திராட்சையை  நெய்யில் பொன்னிறமாகும் வரை வறுத்து  எடுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் அரைத்த வைத்துள்ள பால் ரஸ்க் பொடியை சேர்த்து சிறு தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.இப்போது சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. பிறகு இனிக்காத கோவாவை சேர்த்து நன்றாக கிளறவும். ரஸ்க்கோடு கோவா நன்றாக கலக்க வேண்டும்.  ஒருகப் வெந்நீர், ஒரு கப் பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
  4. குறைந்த தீயில் 5 நிமிடம் நன்றாக கிளறி கொண்டே வேக வைக்கவும்.  பின்னர்ஒவ்வொரு 5-10 நிமிடங்களுக்கும் நெய் சேர்த்து நன்கு  கிளறிவிட்டு கொண்டே இருக்கவும். கிளறி விட நெய் முழுவதும் ரஸ்க்கில் நன்றாக கலந்து விடும்.
  5. இப்படியே தொடர்ந்துகை விடாமல் கிளறி கொண்டு இருக்கவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, நெய் தனித்தனியாக பிரிய தொடங்கும்.
  6. இப்போது வறுத்த உலர் பழங்கள், ஏலக்காய் தூள், முலாம்பழம் விதைகள் சேர்த்து  நன்றாககலந்து விட்டு ப்ரெட் அல்வாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி  பரிமாறினால்சூடான சுவையான ப்ரெட் இல்லாத ப்ரெட் அல்வா தயார்.