கமகமக்கும் சுவையான கோதுமை தோசை செய்வது எப்படி ?

Summary: எளிய மக்கள் இல்லங்களிலும் இன்றும் கோதுமை முக்கிய உணவுப் பொருள். இந்த கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி, ஆகியவற்றிற்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. ஆனால் கோதுமை சிம்பளாக பயன் படுத்த வழி செய்வது தோசை. ஆனால் சப்பாத்தி, பூரி சாப்பிட்டு பழகிய பலருக்கு கோதுமை தோசை பிடிப்பதில்லை. செய்ய வேண்டிய முறையில் செய்தால் கோதுமை தோசையும் சுவையான உணவே

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • ½ கப் அரிசி மாவு
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொடுமை மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
  2. கலந்த பிறகு தண்ணீர் சேர்த்து கோதுமை மாவு கட்டி இல்லாமல் நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
  4. கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும். கவனமாக பார்க்கவும்.
  5. இப்பொழுது கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள, புதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.