சுட சுட சாதத்துடன் சாப்பிட ஹோட்டல் ஸ்டைல் இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால்தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள்விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அசைவஉணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள்.அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு தொக்கை தான்இப்போது பார்க்க போகிறோம். சுவையான ஒரு இறால் தொக்கு மேலும் சுவையாக எப்படிசெய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Ingredients:

  • 1/2 கிலோ இறால்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • உப்பு
  • 2 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாத்திரத்தில் இறாலை எடுத்து தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும், பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  2. பிறகு மிக்சி ஜாரில் இஞ்சியையும், பூண்டையும் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும், பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
  3. பின்னர்,அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதங்கியபின், நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.மேலும் அதில் தக்காளி நன்கு வதங்கியவுடன், அதில் உப்பு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து முதல் 15 நிமிடங்கள் வதக்கினால் போதும்.
  5. இறக்கும் போதுமிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கெட்டியாக வரும் வரை கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான இறால் தொக்கு தயார்